விமானத்தில் அலுவல் குறிப்புகளை படித்தபடியே பயணம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - வைரலாகும் புகைப்படம்

M K Stalin Coimbatore Flight
By Nandhini Aug 24, 2022 08:30 AM GMT
Report

விமானத்தில் அலுவல் குறிப்புகளை படித்தபடியே கோவைக்கு பயணம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

கோவை பயணம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

இன்று கோவை, ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் தமிழக முதலமைச்சர் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்து, ரூ.663 கோடி ரூபாயில் 748 புதிய திட்டங்களுக்கு தமிழக முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

விமானத்தில் அலுவல் குறிப்புகளை படித்த முதலமைச்சர்

சென்னையிலிருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 7:00 மணிக்கு விமானத்தில் கோவைக்கு பயணம் செய்தார்.

அப்போது, விமான பயணத்தில் அலுவல் குறிப்புகளை படித்தபடி, கோவைக்கு பயணம் செய்தார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

m.k.stalin