டார்ச் லைட் அடித்து ரயிலை நிறுத்திய தம்பதி - ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கிய முதலமைச்சர்!

M K Stalin Tamil nadu Railways Tenkasi
By Jiyath Feb 28, 2024 05:23 AM GMT
Report

விபத்தில் சிக்க இருந்த ரயிலை டார்ச் லைட் அடித்து நிறுத்திய தமபதிக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ரூ 5 லட்சம் வெகுமதி வழங்கினார். 

விபத்து 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியரை கிராமம், 'எஸ்' - வளைவு என்ற தமிழக - கேரள எல்லைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

டார்ச் லைட் அடித்து ரயிலை நிறுத்திய தம்பதி - ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கிய முதலமைச்சர்! | M K Stalin Awarded Couple Prevented Train Accident

அப்போது அந்த லாரி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை - கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

அப்போது அந்த பகுதியில் வசித்து வந்த சண்முகையா-வடக்குத்தியாள் தம்பதியினர் தண்டவாளத்தில் ஓடிச்சென்று டார்ச் லைட் அடித்து, ரயில் ஓட்டுநருக்கு சைகை காண்பித்து ரயிலை தடுத்து நிறுத்தினர்.

மோடியா, லேடியா? என கேட்ட ஜெயலலிதா - ஆட்சியை புகழ்ந்த பிரதமர் மோடி!

மோடியா, லேடியா? என கேட்ட ஜெயலலிதா - ஆட்சியை புகழ்ந்த பிரதமர் மோடி!

வெகுமதி 

இதனால் ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த தம்பதியினரின் வீரதீர செயலை பலரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

டார்ச் லைட் அடித்து ரயிலை நிறுத்திய தம்பதி - ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கிய முதலமைச்சர்! | M K Stalin Awarded Couple Prevented Train Accident

அதன்படி சண்முகையா-வடக்குத்தியாள் தம்பதியினரை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்த மு.க.ஸ்டாலின், பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை வெகுமதியாக வழங்கினார். முன்னதாக திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 லட்சம் வெகுமதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.