ஆறு, குளங்களில் குளிக்கச் செல்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் - முதலமைச்சர் வேண்டுகோள்
ஆறு, குளங்களில் குளிக்கச் செல்வர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர் ஆற்றுத் தடுப்பணை
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் போலீஸ் சரகம் கீழ் அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டிருந்தது. நேற்று காலை அந்தப் பகுதியை சேர்ந்த பெண் பிரியா, மாணவிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷிணி, நவி ஆகியோர் தடுப்பணையில் குளிக்கச் சென்றனர்.
7 பேர் உயிரிழப்பு
குளித்துக் கொண்டிருக்கும்போது, ஆழமான பகுதியில் இவர்கள் இறங்கிவிட்டனர். இதனையடுத்து, இவர்கள் நீரில் தத்தளித்து கத்தி கூச்சலிட்டனர். இவர்களின் சத்தம் கேட்டு, கிராம மக்கள் ஓடி வந்து ஆற்றில் மூழ்கிய 7 பேரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், இவர்கள் 7 பேரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆற்றில் குளிக்கச் சென்ற 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.5 லட்சம் நிதியுதவி
ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் வேண்டுகோள்
ஆறு, குளங்களில் குளிக்கச் செல்லும் சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.