206 பேருடன் மாட்டிக்கொண்ட சொகுசு கப்பல்; 4 நாட்கள் போராட்டம் - இறுதியில் நடந்தது என்ன?
206 பயணிகளுடன் சொகுசு கப்பல் 4 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.
சிக்கிய கப்பல்
ஆர்க்டிக் பெருடங்கடல் பகுதியில் 206 பயணிகளுடன் சொகுசு கப்பல் ஒன்று சகதியில் சிக்கி நகர முடியாமல் மாட்டிக்கொண்டது. கிரீன்லாந்து தலைநகர் நூக்கில் இருந்து 1400 கிலோ மீட்டர் தொலைவில் சிக்கியது.
மோசமான வானிலை காரணமாக மீட்பு நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டது. இந்த கப்பலை மீட்க கடந்த 3 நாட்களாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 4 ஆம் நாள் மீட்கப்பட்டு புறப்பட்டுச் சென்றது.
தவித்த பயணிகள்
இதில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள். இதற்கிடையில், கப்பலில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
நபர் ஒருவர் பயணம் செய்வதற்கு இந்த கப்பலில் ரூ. 28 லட்சம் வரையில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் பயணிக்கும்போது திமிங்கலம், சுறா, போலார் கரடிகள் உள்ளிட்ட உயிரினங்களை பார்க்க முடியும்.
டென்மார்க்கில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல் ஒரு மாதத்திற்கு மேலாக உலக நாடுகளை சுற்றி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.