அட.., தமிழகத்தின் முக்கிய இடத்தில் இடம்பெறும் லூலூ மால் - எங்கே தெரியுமா?
தமிழ்நாட்டில் லூலூ மால் கட்டப்படும் இடம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
லூலூ மால்
கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் அரசு முறை பயணமாக துபாய் சென்றார். துபாயில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்புகளை மேற்கொண்டார் அதில் பல்வேறு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது.
அதன்படி, லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்தது. 2 மால்களை அமைக்க முடிவு செய்துள்ளது. மேலும், உணவு பதனிடும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
சென்னையில்..
கிட்டத்தட்ட 3000 ஆயிரம் பேருக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இதுவரை கேரளா மற்றும் பெங்களூரில் மட்டுமே அதிகமாக கவனம் செலுத்தி வந்த அந்த நிறுவனம் தமிழ்நாடு பக்கம் திசையை திருப்பியுள்ளனர்.
இந்நிலையில், ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில், மகாபலிபுரம் செல்லும் வழியில், மால் கட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், கேரளா, பெங்களூரில் இந்த மால்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.