சுடுக்காட்டிற்கு நடுவில் டீ கடை; வெளுத்து வாங்கும் விற்பனை - வைரல் வீடியோ
சுடுக்காட்டுக்கு மத்தியில் அமைந்துள்ல டீ கடை பேசுப்பொருளாகியுள்ளது.
கல்லறை
குஜராத், லால் தர்வாஜா என்னும் பகுதியில் டீ கடை ஒன்று அமைந்துள்ளது. இது 72 ஆண்டுகளாக அங்கு தான் இயங்கி வருகிறதாம். இந்தக் கடையின் உரிமையாளர் கிருஷ்ணன் குட்டி. இவர் இந்த இடத்தை முதன் முதலில் விலைக்கு வாங்கியபோது அங்கு கல்லறைகள் இருக்கின்றன என்ற தகவல் தெரியாமல் வாங்கியுள்ளார்.

இருப்பினும் ஒரு உணவகம் அல்லது டீ கடை அமைக்க வேண்டும் என எண்ணியுள்ளார். தொடர்ந்து, கல்லறைகள் இருக்கும் இடத்தை சுற்றி கம்பி தடுப்புகளை அமைத்துவிட்டு, அதைச் சுற்றியிலும் அமைக்கப்பட்ட இரும்புத் தூண்களின் பலத்தில் கடையை அமைத்துள்ளார்.
லக்கி டீ ஸ்டால்
டீ கடைக்கு, ‘லக்கி டீ ஸ்டால்’ என்றொரு பெயர் உள்ளது. அங்கு மேலும், “உயிரோடு உள்ளவர்களை மதிப்பதைப் போலவே, இறந்தவர்களையும் மதிப்போம்’’ என வாசங்களை வைத்துள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், கூட்டம், கூட்டமாக வாடிக்கையாளர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
இதனை ஒருவர் வீடியோவாக எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோ வைரலாகிய நிலையில், கல்லறை டீ கடைக்கு ஆதரவாகவும், இதை விமர்சித்தும் கமெண்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.