கோயிலை இடிச்சா 3 நாள்ல சுடுகாடு.. பெண் சாமியார் சாபம் - அலறி ஓடிய அதிகாரிகள்

Tamil nadu Chennai
By Sumathi Oct 16, 2022 01:18 PM GMT
Report

காளி கோயிலை இடிக்க வந்த அதிகாரிகளுக்கு, பெண் சாமியார் சாபம் விட்ட சம்பவாம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் அகற்றம்

செங்கல்பட்டு, வண்டலூர் அருகே உள்ள கொளப்பாக்கம் பகுதியில், நீர்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள காளி கோயில் ஒன்றை அகற்றுவதற்காக அதிகாரிகள் சென்றனர். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அங்கிருந்த திருநங்கைகள் சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோயிலை இடிச்சா 3 நாள்ல சுடுகாடு.. பெண் சாமியார் சாபம் - அலறி ஓடிய அதிகாரிகள் | Lady In Chengalpattu Kali Temple Threat Officials

அவர்களின் எதிர்ப்பையும் மீறி அந்த கோயிலை அகற்றும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த பெண் சாமியார் ஒருவர் அந்த கோயிலில் உள்ள காளியம்மன், நாகாத்தம்மன், வீரபத்திரன் சிலைகளுக்கு மிளகாய்ப் பொடியால் அபிஷேகம் செய்தார்.

 தெறித்த அதிகாரிகள்

அப்போது அவருக்கு சாமி வந்த நிலையில், ‘ஆத்தா உக்கிரமாக இருக்கிறாடா. உன் இடத்தை எவன் அபகரிக்க நினைக்கிறானோ அவனைச் சுடுகாட்டுக்கு அனுப்பு.’ என சாபம் விட்டார். இதைக் கண்டு ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து,

அங்கிருந்து தெறித்து ஓடினர். இதைத் தொடர்ந்து கோயிலை அகற்றக் கோயில் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.