பெற்ற தந்தையின் ஆசை; ICU-வில் நிறைவேற்றிய மகள் - வைரல் Video!

Viral Video Uttar Pradesh India Marriage
By Jiyath Jun 16, 2024 01:01 PM GMT
Report

தனது தந்தையின் ஆசையை மகள் ஒருவர் ஐ.சி.யூ-வில் நிறைவேற்றியுள்ளார்.

உடல்நலக் குறைவு      

உத்திர பிரதேச மாநிலம் லக்னோ சவுக்கில் முகமது இக்பால் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே முகமது இக்பால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பெற்ற தந்தையின் ஆசை; ICU-வில் நிறைவேற்றிய மகள் - வைரல் Video! | Lucknow Hospital Icu Hosts Unique Wedding

இவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது தந்தையின் உடல் நலத்தை கருத்தில் கொண்ட மகள், அவரது முன்பாகவே திருமணம் நடைபெற முடிவு செய்தார்.

'செனாப் பாலம்' 359 மீட்டர் உயரம்.. ஈஃபிள் டவரை விட அதிகம் - ஜம்மு காஷ்மீரில் அதிசயம்!

'செனாப் பாலம்' 359 மீட்டர் உயரம்.. ஈஃபிள் டவரை விட அதிகம் - ஜம்மு காஷ்மீரில் அதிசயம்!

திருமணம் 

இதனையடுத்து மருத்துவமனையின் ஒப்புதலோடு இஸ்லாமிய முறைப்படி ஐசியுவில் திருமண விழா நடந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பெற்ற தந்தையின் ஆசை; ICU-வில் நிறைவேற்றிய மகள் - வைரல் Video! | Lucknow Hospital Icu Hosts Unique Wedding

இதை பார்த்த இணையவாசிகள், இந்த செயல் தந்தை மீது மகள் வைத்திருக்கும் அன்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாடு என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.