கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - பொண்ணு யார் தெரியுமா?

Kolkata Knight Riders Cricket Indian Cricket Team Marriage IPL 2024
By Jiyath Jun 02, 2024 12:03 PM GMT
Report

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் வெங்கடேஷ் ஐயருக்கு வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

திருமணம் 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டராக வளம் வருபவர் வெங்கடேஷ் ஐயர். இவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 370 ரன்கள் குவித்தார்.

கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - பொண்ணு யார் தெரியுமா? | Kkr Venkatesh Iyer Marriage Shruti Ragunathan

இதில் 4 அரை சதங்களும் அடங்கும். மேலும், கடந்த 2022-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸ்ருதி ரகுநாதன் என்பவரை வெங்கடேஷ் ஐயர் இன்று திருமணம் செய்து கொண்டார். ஸ்ருதி ரகுநாதன் பேஷன் மேனேஜ்மென்ட்டில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் தோனி? நெகிழவைத்த சம்பவம் - இதை கவனிச்சீங்களா!

டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் தோனி? நெகிழவைத்த சம்பவம் - இதை கவனிச்சீங்களா!

ரசிகர்கள் வாழ்த்து

PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் படித்து முடித்துள்ளார்.  தற்போது பெங்களூருவில் உள்ள லைஃப் ஸ்டைல் ​​இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வணிகப் பொருள் திட்டமிடுபவராக அவர் பணிபுரிகிறார். 

கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - பொண்ணு யார் தெரியுமா? | Kkr Venkatesh Iyer Marriage Shruti Ragunathan

இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த ஜோடிக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் சூழப்பட்ட பாரம்பரிய விழாவில் இந்து முறைப்படி திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஜோடிக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.