iPhone க்காக டெலிவரி ஏஜென்ட் கொலை - உடலை சாக்கடையில் வீசிய கொடூரம்
ஐபோனுக்காக டெலிவரி ஏஜென்ட் கொல்லப்பட்டுள்ளார்.
ஐபோன் ஆர்டர்
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த பரத் குமார் என்ற நபர் கடந்த 8 ஆண்டுகளாக டெலிவரி ஏஜென்ட் ஆக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி ஆகாஷ் என்ற நபருக்கு பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்த 1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோனை COD முறையில் டெலிவரி செய்ய சென்றுள்ளார்.
கொலை
அதன்பின் 2 நாட்களாக பரத் குமார் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர் பிரேம் குமார் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், பரத் குமாரின் கால் அழைப்புகளை ஆய்வு செய்து அவர் கடைசியாக பேசிய ஆகாஷ் என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பரத் குமாரை கழுத்தை நெரித்து கொன்று உடலை சாக்கு பையில் கட்டி இந்திரா நகர் கால்வாயில் வீசி உள்ளனர். இந்த கொலைக்கு உறுதுணையாக ஆகாஷின் நண்பர் கஜனனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது வரை பரத் குமாரின் உடல் கிடைக்காத நிலையில் மாநில பேரிடர் மீட்புப் படை உதவியுடன் அவரது உடலை தேடி வருகின்றனர். ஐபோனுக்காக டெலிவரி ஏஜென்ட் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.