பிரபாகரனின் மனைவி, மகள் உயிரோடதான் இருக்காங்க; அவங்களோட சாப்பிட்டேன் - சகோதரி பரபர வீடியோ!
பிரபாகரனின் மனைவி, மகள் உயிருடன் உள்ளார்கள் என மதிவதினியின் சகோதரி என வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி தகவல்
இலங்கையில் முப்பது ஆண்டுக் காலமாக நடந்த உள்நாட்டுப் போர், 2009 ம் ஆண்டு மே மாதம் 19 ம் தேதி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
அதில், இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது உறவினர்கள் உயிரிழந்ததாகவும் இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.
பரபரப்பு வீடியோ
இந்நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியின் சகோதரி எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பெண் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த 2009 ம் ஆண்டு நடந்த போரில் எனது தங்கை மதிவதனி, மகள் துவாரகா மற்றும் உறவினர்கள் இறந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. ஆனால் அவர்கள் உயிருடன் இருப்பதை நான் அறிந்து கொண்டேன்.
அத்துடன் அவர்களை நேரில் சந்தித்து உரையாடி அவர்களுடன் உணவருந்தி விட்டு வந்துள்ளேன். இந்த செய்தியை மிகவும் மகிழ்ச்சியுடன் எனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் இந்தச் செய்தியை கடவுள் கொடுத்த நன்கொடையாகவே நினைக்கின்றேன். நன்றி வணக்கம்!” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் உயிருடன் உள்ளதாக வெளியான செய்தி போலியானது என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கேனல் நலின் ஹேரத் தெரிவித்துள்ளார்.