நான் செஞ்சது தப்புதான்; ஹெல்மெட்டை தூக்கி வீசியிருக்கக்கூடாது - பிரபல வீரர் வேதனை
வெற்றிபெற்ற பின் ஹெல்மட்டை கழற்றி வீசி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தவறு என ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.
ஆவேஷ் ஜான்
ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு - லக்னோ அணிகள் மோதின. சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் செய்த தவறால் லக்னோ அணி வெற்றியை பெற்றது.
அதனைத் தொடர்ந்து, லக்னோ அணியின் ஆவேஷ் கான் தலையில் மாட்டியிருந்த ஹெல்மட்டை கழற்றி தூக்கி வீசி ஆவேசமாக கொண்டாடினார். இதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர் தூக்கி வீசி உடைந்த ஹெல்மட் நிக்கோலஸ் பூரனின் ஹெல்மட் என்று தெரிய வந்தது.
rcb vs lsg
அதனையடுத்து அந்த செயலை ரசிகர்கள் கலாய்த்து தள்ளினர். இந்நிலையில் அதுகுறித்து பேசியுள்ள ஆவேஷ் கான், எனக்கு ரசிகர்களிடம் இருந்து ஏராளமான மெசேஜ்கள் குவிந்தன. பலராலும் கிண்டல் செய்யப்பட்டேன்.
அதன்பின்னரே நான் ஹெல்மட்டை வீசி கொண்டாடியிருக்க கூடாது என்று எண்ணினேன். வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் உணர்வுப்பூர்வமாக இருந்த போது, அதனை செய்துள்ளேன். அதன்பின்னரே தவறை உணர்ந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.