இந்திய அணிக்கு தேவையில்லாத வீரர்கள் இவர்கள் - கடுப்பாகும் ரசிகர்கள்

Petchi Avudaiappan
in கிரிக்கெட்Report this article
நியூசிலாந்து எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் தேவையில்லாத வீரர்களை தேர்வாளர்கள் தேர்வு செய்துள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர்.
நியூசிலாந்து அணி டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்தியா வர உள்ளது. இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து பங்கேற்க உள்ளது.
டி20 தொடருக்காக கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், ஆர்.அஷ்வின், அக்சர் படேல் , அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது. சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இதில் ஷிகர் தவான், சுப்மன் கில் போன்ற வீரர்கள் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. இவர்களுக்கு பதில் தேவையில்லாத 3 வீரர்களை தேர்வாளர்கள் தேர்வு செய்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
முதலாவதாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக உள்ள புவனேஷ்வர் குமார் தற்பொழுது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறந்த பார்மில் இல்லை. இவருக்கு பல வாய்ப்புகள் கொடுத்தும் அவர் தனது பார்மை மீட்டெடுக்கவில்லை.
இரண்டாவதாக இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரும்,டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடுபவருமான முகமது சிராஜ் 2021 ஐபிஎல் தொடரில் இவர் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை 11 போட்டிகளில் பங்கேற்ற இவர் 15 விக்கெட்களை மட்டும்தான் எடுத்தார். இவருக்கு பதில் இந்திய அணியின் இளம் வீரர் அர்ஷ்திப் சிங்கிற்கு வாய்ப்பு அளித்திருக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளது.
மூன்றாவதாக ஆவேஷ் கான் 2021 ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் மிக சிறப்பாக விளையாடினார், ஆனால் ந்திய அணியில் ஏற்கனவே நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்று விட்டதால் இவருடைய தேர்வு தேவையில்லாத ஒன்றாகவே கிரிக்கெட் வல்லுனர்களால் பார்க்கப்படுகிறது. மேலும் இவருக்கு பதில் கூடுதல் பேட்ஸ்மேன் ஒருவரை தேர்ந்தெடுத்திருந்தால் அது இந்திய அணிக்கு பலமாக அமைந்திருக்கும் என கருத்து எழுந்துள்ளது.