ரூ.500க்கு சமையல் சிலிண்டர் - அரசு அதிரடி அறிவிப்பு!
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ரூ.500க்கு வழங்கப்படும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அசோக் கெலாட்
ராஜஸ்தான், அரசு பள்ளி நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொண்டார். அதில், அம்மாநில அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டும் பங்கேற்றார். தொடர்ந்து அதில் பேசிய முதலமைச்சர்,
"அடுத்த மாதம் பட்ஜெட்டுக்கு தயாராகி வருகிறேன். இப்போது ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். உஜ்வாலா திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி ஏழைகளுக்கு எல்பிஜி இணைப்புகளை வழங்கினார்.
ரூ.500க்கு சிலிண்டர்
ஆனால் சிலிண்டர் விற்பனை காலியாக உள்ளது. அதன் விலை இப்போது ரூ. 400 முதல் ரூ. 1,040 வரை உள்ளது. ஏழைகள் மற்றும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு,
ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை தலா 500 ரூபாய்க்கு வழங்குவோம் என்பதை இங்கு கூற விரும்புகிறேன்" என அறிவித்துள்ளார்.