பிரச்சாரக் கூட்டத்தில் காளை மாட்டை அவிழ்த்து விட்ட பாஜகவினர்... - பதறி தெறித்து ஓடிய தொண்டர்கள்...!

Gujarat Viral Video
By Nandhini Nov 29, 2022 12:12 PM GMT
Report

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் பாஜகவினர் காளை மாட்டை அவிழ்த்து விட்டதால், தொண்டர்கள் தெறித்து ஓடினர்.

காளை மாட்டை அவிழ்த்து விட்ட பாஜகவினர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், குஜராத் மாநிலம், மெஹ்சானாவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூட்டத்தில் பாஜகவினர் காளை மாட்டை அவிழ்த்து விட்டுள்ளனர்.

அந்த காளை மாடு பிரச்சார கூட்டத்தில் ஓடி வந்து மிரட்டியதால், அதிர்ச்சி அடைந்த தொண்டர்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று சிதறியடித்து ஓடினர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பாஜகவினரின் இந்தச் செயலை கண்டித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.   

gujarat-ashok-gehlot-mehsana-buffalo-cow