கேஸ் சிலிண்டரில் வந்த மாற்றம்; ரேட் எவ்வளவு பாருங்க - குஷியில் கஸ்டமர்ஸ்!
வணிக சிலிண்டரின் விலை 15 நாட்களுக்குப் பிறகு குறைந்துள்ளது.
வணிக சிலிண்டர்
வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. மாதந்தோறும் 1ஆம் தேதி விலை மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அதன்படி, நவம்பர் 1-ந்தேதி விலை மாற்றியமைக்கப்பட்டு, சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 101.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1999.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சிலிண்டருக்கு 57 ரூபாய் குறைந்து 1942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.
விலை குறைவு
அதே 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு ஏற்பட மாறுபடும்.
இதனிடையே, சமையல் சிலிண்டருக்கான மானியம் விரைவில் உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.