பொதுத்தேர்வு முடிவுகள் ; மதிப்பெண் குறைந்தால் தளர வேண்டாம் - முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!
பொதுத்தேர்வு முடிவுகள் தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
தேர்வு முடிவுகள்
மாணவர்களை விட மாணவியர் அதிக அளவில் தேர்ச்சி (4.07%) அடைந்துள்ளனர். 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். 7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் பாடத்தில் 35 பேரும், ஆங்கிலத்தில் ஏழு பேரும் இயற்பியலில் 633 பேரும், வேதியியலில் 471 பேரும் , நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.உயிரியலில் 652 பேரும் ,கணிதத்தில் 2057 பேரும் ,தாவரவியலில் 90 பேரும், விலங்கியலில் 382 பேரும் , கணினி அறிவியலில் 696 பேரும், வணிகவியலில் 6,142 பேரும்,
முதல்வர் ஸ்டாலின்
கணக்குப்பதிவியலில் 1547 பேரும், பொருளியலில் 3,29 பேரும்,கணினி பயன்பாடுகளில் 2251 பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளிகளில் 210 பேரும் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பது, பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும். இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.