மெட்ரோவில் எல்லை மீறி முத்தமிட்ட காதலர்கள் - கடுப்பான பயணிகள்!
மெட்ரோ ரயிலில் காதலர்கள் எல்லை மீறிய சம்பவம் முகம் சுழிக்க வைத்துள்ளது.
மெட்ரோ
டெல்லி மெட்ரோ ரயிலில் அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் பயனிகள் செவிசாய்த்த படி தெரியவில்லை.
அந்த வரிசையில், மெட்ரோ ரயிலுக்குள், மெய்மறந்து காதல் ஜோடி முத்தமிட்ட காணொளி வெளியாகி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லை மீறல்
முன்னதாக காதலர்கள் கட்டிப்பிடித்து முத்தமிட்டுக் கொள்வது, கவர்ச்சி உடையில் செல்வது, நடனமாடுவது, மேக்கப் போட்டுக் கொள்வது என தொடர்ந்து எல்லை மீறும் சம்பவங்க நடைபெற்று வருவது வழக்கமாகவே அமைந்து வருகிறது.
இதனால் அவதிக்குள்ளான சக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்கின்றனர்.