சீட் பிடிக்க இப்படியா ? ரயிலில் மோதிக்கொண்ட பெண் பயணிகள் : தடுக்க வந்த பெண் போலீஸுக்கு ஏற்பட்ட விபரீதம்
மும்பையில் மின்சார ரயிலில் பெண் பயணிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பை மின்சார ரயில்
மகாராஷ்ட்ரா தலைநகர் மும்பை ஆகும். மக்கள் தொகை அதிகமுள்ள மும்பையில் மின்சார ரயிலில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை தானேவில் இருந்து பன்வேல் நோக்கி மின்சார ரயில் ஒன்று இரவு சென்று கொண்டிருந்தது.
மும்பையின் தானே - பன்வெல் லோக்கல் மின்சார ரயிலில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ரத்தம் கொட்டும் அளவுக்கு பெண் பயணிகள் இடையே கடும் சண்டை நடைபெற்றது. சக பயணி ஒருவர் இந்த மோதலை வீடியோ எடுத்துள்ளார்
ரத்தம் கொட்டும் அளவிற்கு மோதல்
அதில், பெண் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் சண்டையிட்டு கொள்கின்றனர். ஆக்ரோஷமாக ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டு கடும் சண்டை நடக்கிறது.
ஒருவருக்கொருவர் தலைமுடியை பிடித்து இழுத்து மோதிக்கொள்கின்றனர்,அப்போது சண்டையை நிறுத்த பெண் காவலர் ஒருவர் வருகிறார். ஆனால் அவரும் தாக்கப்படுகிறார்.
காவலருக்கு காயம்
தலையில் விழுந்த அடியுடன் சக பெண் காவலர்களுக்கு போன் செய்வது போல தெரிகிறது. சிறிது நேரத்தில் இரண்டு பெண்களின் முகத்தில் இருந்து ரத்தம் கொட்டுகிறது, இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
So Disgusting & fearless wrestling #Local #Train #Mumbai #Panvel #Thane
— Govandi Citizens #??????????? ⤵️ (@GovandiCell) October 6, 2022
?pic.twitter.com/oY61SqAVH4
இந்த சம்பவத்திற்கு காரணமான ஆர்ஜூ மற்றும் குல்னாஜ் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.