காதலனுடன் விடுதியில் காதலி; பார்த்த கோலம் - கதறிய பெற்றோர்கள்!

By Sumathi Sep 10, 2025 08:37 AM GMT
Report

காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதல் விவகாரம்

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் திரிஷா (20). இவர் ஜவுளி கடையில் வேலைப்பார்த்து வந்தார்.

ராபின் - திரிஷா

அப்போது அதே ஜவுளி கடையில் வேலை செய்துவந்த திருவள்ளூரைச் சேர்ந்த ராபின் (22) என்பவருடன் திரிஷாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதலுக்கு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தக் காதல் ஜோடி வேப்பேரி பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ராபின் கோபமாக அறையை விட்டு வெளியேறி கதவையும் வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு புறப்பட்டதாக கூறப்படுகிறது.

நடுரோட்டில் இளைஞர்களை கட்டியணைத்து இளம்பெண்கள் ரகளை - பரபரப்பு

நடுரோட்டில் இளைஞர்களை கட்டியணைத்து இளம்பெண்கள் ரகளை - பரபரப்பு

ஜோடி தற்கொலை

பின் திரிஷாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு 'அவள் உங்களிடம் பேச வேண்டும்' என்றும் 'திரிஷா வேப்பேரியில் உள்ள விடுதி ஒன்றில் இருக்கிறாள்' என்றும் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் சம்பந்தப்பட்ட விடுதிக்கு தொடர்புகொண்டு, நடந்த சம்பவத்தை கூறினர்.

காதலனுடன் விடுதியில் காதலி; பார்த்த கோலம் - கதறிய பெற்றோர்கள்! | Lovers In Lodge End Their Life Chennai

பின்னர் விடுதி ஊழியர் மற்றொரு சாவியால் அறையை திறந்து பார்த்துள்ளார். அங்கு திரிஷா தூக்கில் தொங்கியபடி கிடந்தார்.

இதையறிந்த ராபின் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தகவலறிந்த போலீஸார் 2 உடல்கல்ளையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.