காதலர் தினத்தில் மல்லுக்கட்டும் சந்தானம் - தனுஷ்..எந்த விஷயத்துக்காக தெரியுமா?
திரையரங்குகளில் காதலர் தினத்துக்காக தனுஷ் மற்றும் சந்தானம் இருவரும் மல்லுக்கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். தியேட்டாகளில் 50% இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனால், தற்போது முன்னணி நடிகர்கள் தங்களது படங்களை தியேட்டர்களில், வெளியிட தயராகி வருகின்றனர். அந்த வகையில், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் காதலர் தினத்தையொட்டி வருகிற பிப்ரவரி மாதம் 12-ந் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதற்கு போட்டியாக அதே நாளில் சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ் படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.