ஹோட்டல் அறையில் காதலியிடம் இளைஞர் வெறிச்செயல் - 12 வருஷமா.. பகீர் பின்னணி!
காதலித்து வந்த பெண்ணை இளைஞர் ஹோட்டல் அறையில் சுட்டுக் கொன்றுள்ளார்.
காதல் விவகாரம்
மகாராஷ்டிரா, புனே தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் வந்தனா திவேதி (26). இவர், ஹிஞ்சேவாடி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.
அப்போது அறையை சுத்தம் செய்வதற்காக ஹோட்டல் ஊழியர் ஒருவர், அறைக்குள் வந்து பார்த்த போது அங்கு திவேதி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியான ஊழியர், நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கவே போலீஸில் புகாரளிக்கப்பட்டது.
பெண் சுட்டுக் கொலை
உடனே, விரைந்து வந்த போலீஸார் உடலை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அறை முன்பதிவு விவரங்களில் வந்தனா மற்றும் ரிஷப் நிகாம் ஆகிய பெயர்களில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்துள்ளனர். அதன்மூலம், ரிஷப் நிகாமை கைது செய்தனர்.
தொடர் விசாரணையில், இருவரும் 12 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 12வது வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ரிஷப் நிகம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று இரண்டு பேரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். நிகம் தன்னை உதாசீனப்படுத்துவது குறித்தும், வந்தனாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின், ஆத்திரத்தில் வந்தனாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியது தெரியவந்தது. ஹோட்டல் இருக்கும் இடத்திற்கு அருகில் நிகழ்ச்சி ஒன்றிற்கு பாண்ட் வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. அந்த சத்தத்தில் துப்பாக்கியால் சுடும் சத்தம் தங்களுக்கு கேட்கவில்லை என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.