காதலியை அவரது காதலனிடமிருந்து மீட்டு தாங்க; இளைஞர் புகார்- திகைத்த போலீஸார்!
காதலியை அவரது காதலனிடமிருந்து மீட்டு தரக் கோரி இளைஞர் ஒருவர் புகாரளித்துள்ளார்.
ஏமாற்றிய காதலி
கர்நாடகா, மடிகேரி சோமவார்பேட்டையைச் சேர்ந்தவர் இளம்பெண் குஷி. ராய்ச்சூருக்கு லேப் டெக்னீசியன் பயிற்ச்சிகாக வந்த அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
இதனையடுத்து, அதே மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றுபவர் விகாஸ் குமார். இவர், குஷி தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், அவரது மீட்டுத் தருமாறும் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். தொடர்ந்து, இதுகுறித்து அவர் கூறுகையில்,
"நானும், குஷியும் மூன்று ஆண்டுகளாக காதலித்தோம். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்தோம். இந்த நிலையில் பயிற்சிக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு குஷியை சேர்த்து விட்டேன். அப்போது அங்கு ஒரு இளைஞருடன் குஷிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்து நான் கேட்ட போது, நண்பர் என்றாள்.
காதலன் புகார்
ஆனால், அவர்கள் இருவரையும் ஒரு பூங்காவில் கையும், களவுமாக பிடித்த போது மனம் உடைந்து போனேன். அந்த இளைஞரை காதலிப்பதாக குஷி அப்போது சொன்னார். அவளுக்கான நான் இதுவரை 5 லட்ச ரூபாய்க்கு மேல் போக்குவரத்திற்கு மட்டும் செலவு செய்துள்ளேன். அவள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது.
தூக்க மாத்திரை சாப்பிட்டு மூன்று முறை தற்கொலைக்கு முயன்றேன்.
அவள் அந்த இளைஞரை திருமணம் செய்து விட்டு, திரும்பி வந்தாலும் நான் அவளுடன் வாழத் தயாராக இருக்கிறேன். ஆனால், என்னை அவள் நம்பவில்லை. அவளிடமிருந்து எனக்கு இப்போது மிரட்டல் வந்துள்ளது" என்றார். இதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.