காதல் தெரு தெரியுமா..? மொத்தம் 70 காதல் கதைகள் எல்லாம் ஒரு தெருவில்...!
காதல் திருமணங்கள் இன்னும் பல இடங்களில் பெரும் பிரச்னையை கொண்டதாகவே இருக்கும் நிலையில், ஒரு தெருவிற்கே காதல் தெரு என பெயருள்ளது உங்களுக்கு தெரியுமா..?
காதல் தெரு
ஆம். உள்ளது. இந்த தெருவில் மட்டும் 70 காதல் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இந்த சுவாரசிய காதல் தெரு அமைந்துள்ளது குஜராத் மாநிலம் சூரத் நகரில் தான்.
ஒரே தெருவில் புகுந்த வீடு, பிறந்த வீடு இரண்டும் கொண்ட பெண்கள் இந்த தெருவில் ஏராளம். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் பெண் கொடுத்து பெண் எடுத்தவர்களாகவே உள்ளனர்.
2 தலைமுறைகளாக...
முன்னர் இந்த தெருவின் பெயர் கச்சியா தெரு என்று இருந்துள்ளது. இந்த தெருவில் குஜராத்தை சேர்ந்த கன்பி கச்சியா சமூகத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
இந்த சமூகத்தின் மொத்த மக்கள் தொகையே 1850 பேர் தான். மொத்தமாக 327 குடும்பங்கள் இருக்கின்றன. கச்சியா தெரு தோபி தெரு என்ற தெருவுடன் சேர்த்து, 70 காதல் ஜோடிகளின் வீடுகள் உள்ளது.
இவர்களில் 42 ஜோடிகள் காதல் திருமணம் செய்துக் கொண்டவர்கள். மேலும் அங்கு வசிப்பவர்களிடம் விசாரித்ததில், இவ்வழக்கம் 2 தலைமுறைகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வருகின்றது.