காதலை ஏற்ற அடுத்த நொடியே 650 அடி உயரத்தில் இருந்து விழுந்த காதலி
ஆஸ்திரியாவில் காதலை ஏற்று கொண்ட பெண் ஒருவர் அடுத்த சில நிமிடங்களில் 650 அடி உயர மலை உச்சியில் இருந்து தவறி விழுந்த சோகம் நடந்துள்ளது.
ஆஸ்திரியா நாட்டின் கரீந்தியா நகரில் 27 வயது நிறைந்த வாலிபர் ஒருவர் காதலியிடம் தனது காதலை தெரிவிக்க விரும்பியுள்ளார். இதற்காக 32 வயதுடைய தனது காதலியை அழைத்து கொண்டு பால்கெர்ட் என்ற மலையின் உச்சிக்கு சென்றுள்ளார்.
பிறகு தனது காதலை காதலியிடம் தெரிவித்துள்ளார் காதலியும் அவரது காதலை ஏற்றுள்ளார். ஆனால் காதலை ஏற்ற அடுத்த நொடியே 650 அடி உயரத்தில் இருந்து அந்த பெண் தவறி விழுந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அவரது காதலர், தனது காதலியை காப்பாற்ற அவரை பிடித்து கொள்ள முயற்சித்து உள்ளார். ஆனால், அது பலனளிக்காமல் அவரும் தவறி விழுந்துள்ளார்.
அந்த காதலர் 50 அடி சென்றதும், மலை முகட்டை பிடித்து கொண்டார். அதில் தொங்கியபடி இருந்துள்ளார். மேலும் அந்த காதலி பனி படர்ந்த இடத்தில விழுந்ததால் உயிர் தப்பினார். அவரை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் பார்த்து அவசர உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன் பிறகு காதலர்களை ஒரு ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காதலை ஏற்ற பெண் மறு நொடியே 650 ஆதி உயரத்தில் இருந்து தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.