தேர்வெழுத சென்ற மாணவிகளுக்கு நேர்ந்த சோகம் - மூவர் மீது ஆசிட் வீசி வெறிச்செயல்!
கர்நாடகாவில் 3 மாணவிகள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெறிச்செயல்
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பியூசி பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.
தேர்வெழுத காலை முதல் மாணவிகள் வந்துக்கொண்டிருந்தபோது கல்லூரிக்குள் நுழைந்த முகமூடியும், தலையில் தொப்பியும் அணிந்து இருந்த மர்ம நபர் ஒருவர், திடீரென அங்கிருந்த ஒரு மாணவி மீது ஆசிட் வீசி உள்ளார்.
அப்போது அப்பெண்ணின் அருகே இருந்த மாணவிகள் மீதும் ஆசிட் பட்டு மூவரும் அலறித் துடித்துள்ளனர்.
தீவிர விசாரனை
படுகாயம் அடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு கிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவிகள் மீது ஆசிட் வீசி தப்பியோடிய வாலிபரை கல்லூரி பணியாளர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரனையில் ஆசிட் வீசிய நபரின் பெயர் அபின் (23) என்றும், கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், ஆசிட் வீச்சு சம்பவத்தில் காயமடைந்த ஒரு மாணவியும், இவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். காதல் பிரச்னை காரணமாக ஆசிட் வீச்சு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது