Thursday, Jul 17, 2025

போலீசில் புகார் கொடுத்ததால் கோபம்... - குழந்தை, சகோதரி, மனைவி மீது ஆசிட் வீசிய கொடூரன்... - பரபரப்பு சம்பவம்...!

Odisha
By Nandhini 2 years ago
Report

ஒரிசாவில் நடந்த ஆசிட் தாக்குதலில் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை, சகோதரி, மனைவி மீது ஆசிட் வீசிய கொடூரன்

நீலகிரியின் சந்தாரா காடியா பகுதியைச் சேர்ந்தவர் சந்தன் ராணா. இவர் ரெமுனா பிளாக்கின் பிம்புரா பகுதியைச் சேர்ந்த பனிதா சிங்கை ஒன்றரை மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்திற்கு பிறகு, சாந்தனுக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி மூலம் 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து பனிதா தன்னுடைய குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதை அறிந்த பனிதாவின் குடும்பத்தினர் சந்தன் ராணாவிடம் தகராறு செய்துள்ளனர். இது குறித்து பனிதாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர்.

பனிதா பீம்புராவில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். இன்று காலை, சகோதரி வீட்டிற்கு வந்த சாந்தன் வீட்டில் இருந்த பனிதா, அவரது சகோதரி பர்ஷா மற்றும் அவரது 2 குழந்தைகள் மீது ஆசிட் வீசினார். ஆசிட் வீசி விட்டு அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் ஆசிட் வீச்சில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சந்தனை வலைவீசி தேடி வருகின்றனர். 

odisha-balasore-acid-attack