கணவன், குழந்தைகளை விட்டுவிட்டு காதலனை சந்திக்க பாகிஸ்தான் சென்ற பெண் - அதிர்ச்சி காரணம்!
ஃபேஸ்புக் காதலனைச் சந்திப்பதற்காக பெண் ஒருவர் பாகிஸ்தான் சென்றுள்ளார்.
ஆன்லைன் காதல்
ராஜஸ்தான், ஆல்வார் பகுதியில் வசித்து வருபவர் அஞ்சு(34). தன்னுடைய பாகிஸ்தான் காதலனைத் தேடி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். சட்டப்படி வாகா எல்லை வழியாக பயணித்துள்ளார்.
அங்கு சென்றவுடன் அவரையும், அவரின் காதலர் நஸ்ருல்லாவையும் போலீஸார் அழைத்துச் சென்றனர். ஆனால் அவரிடம் பயண ஆவணங்கள் சரியாக இருந்ததால் இருவரையும் விடுவித்துவிட்டனர். அஞ்சு தன் காதலனைச் சந்தித்துப் பேச மட்டுமே சென்றிருப்பதாகவும்,
கணவர் புலம்பல்
ஒரு மாதம் பாகிஸ்தானில் இருந்துவிட்டு இந்தியாவுக்கு வந்துவிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் போலீஸார் அஞ்சுவின் வீட்டுக்குச் சென்று அவரின் கணவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தன்னுடைய கணவரிடம் ஜெய்ப்பூர் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். அவரிடம் முறையான பாஸ்போர்ட் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவரது கணவர் என் மனைவி ஆன்லைனில் பேசிப் பழகி வந்தது எனக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர்.