Fake Id: நேரில் வந்து அதிர்ச்சியளித்த காதலன் - நள்ளிரவில் காதலியை கழுத்தறுத்து கொலை!
காதலி ஏமாற்றியதாக நள்ளிரவில் காதலன் அவரை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பேஸ்புக் காதல்
கேரளா, திருவனந்தபுரம் வடசேரி கரையைச் சேர்ந்தவர் இளம்பெண்(17). சம்பவத்தன்று நள்ளிரவில் ரத்த காயங்களுடன் தனது வீட்டு கதவை தட்டி உள்ளார். கதவை திறந்து பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மகளின் கழுத்து அறுக்கப்பட்டு ரத்தம் கொட்டிக் கொண்டிருந்துள்ளது.
உடனடியாக மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த போலீஸ் விசாரணையில், உயிரிழந்த பெண்ணிற்கு, பள்ளிக்கல் பகுதியைச் சேர்ந்த கோபு என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
ஏமாற்றிய காதலி
அந்தப் பெண் பேஸ்புக்கில் மூழ்கி இருப்பவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கோபுவிற்கு அந்த பெண்ணின் மேல் சந்தேகம் எழுந்துள்ளது. வேறு யாருடனாவது பழகுகிறாயா, மெசேஜ் செய்கிறாயா? எனக் கேட்டதற்கு பெண் மறுத்துள்ளார்.
தொடர்ந்து அகில் என்ற இளைஞ்ருடன் பழகி வந்துள்ளார். மேலும் காதலிப்பதாகவும் தெரிவித்துள்ளார். உடனே அவர் நேரில் பார்க்க அழைத்துள்ளார். அந்தப் பெண்ணும் அகிலை அன்று இரவே தன்னுடைய வீட்டிற்கு பக்கத்தில் வருமாறு அழைத்துள்ளார். நள்ளிரவில் வீட்டில் அனைவரும் தூங்கியபிறகு,
கதவை திறந்து கொண்டு வெளியேறியுள்ளார். சென்று பார்த்ததில் அங்கு வந்தவர் காதலன் கோபு என தெரிந்து அதிர்ச்சியாகியுள்ளார். உடனே கோபு கத்தியால் காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு, பைக்கில் தப்பிச்சென்றுள்ளார்.