தூங்கும் போது மீனவர் துடிதுடிக்க கழுத்தறுத்து கொலை! மர்மம் என்ன?
murder
fisherman
rameswaram
By Anupriyamkumaresan
சாயல்குடி அருகே மீனவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள நரிப்பையூர் பகுதியை சேர்ந்த முருகன் மீன்பிடி தொழிலில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மீன் பிடித்து விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் பயங்கர ஆயுதங்களால் முருகனை துடிதுடிக்க கழுத்தறுத்து கொலை செய்து தப்பியோடியுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.