ஜார்க்கண்ட்'ல தான் Love jihad துவங்கியது - பரப்புரையில் மோடி பரபரப்பு பேச்சு
ஜூன் 1 ல் நாடாளுமன்ற கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜார்கண்ட் மாநில தும்கா மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
பரப்புரையின் போது அவர் பேசியதாவது, ஜார்கண்டின் ஒரு மாவட்டத்தில் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. 200-300 ஆண்டுகளாக ஞாயிற்றுக்கிழமை தான் விடுமுறை. ஞாயிற்றுக்கிழமை இந்துக்களுக்கு தொடர்புடையது அல்ல.
ஆனால் கிறிஸ்தவ மக்களுக்கு தொடர்புடையது. இப்போது, அவர்கள் கிறிஸ்தவர்களுடனும் சண்டையிடுகிறார்கள். லவ் ஜிஹாத் 'லவ் ஜிஹாத்' என்ற வார்த்தை ஜார்க்கண்டிலிருந்து தான் உருவானது என்றும், ஜார்கண்ட் மக்கள் தான் இந்த வார்த்தையை வழங்கியுள்ளனர் என பிரதமர் கூறியுள்ளார்.
ஊடுருவல்காரர்களால் பழங்குடியின மக்கள் தொகை குறைந்துள்ளது, எங்கள் பழங்குடியின மகள்கள் ஊடுருவல்காரர்களின் இலக்கின் கீழ் வந்துள்ளனர். பழங்குடியின மகள்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. மகள்கள் கொல்லப்படுகிறார்கள், 50 துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளார்கள், உயிரோடு எரிக்கப்படுகிறார்கள்.
எங்கள் பழங்குடி பெண்களை குறிவைப்பது யார், ஜார்கண்ட் முக்தி மோர்சா ஏன் அவர்களை ஆதரிக்கிறது? என பிரதமர் கூறியுள்ளார். மேலும் பேசியதாவது, 2014 க்கு முன்பு வரை காங்கிரஸ் 24*7 கொள்ளையில் ஈடுபட்டிருந்தது. மோடி ஆட்சிக்கு வந்த பின்பு அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்சா மற்றும் காங்கிரஸ் மாநிலத்தை அனைத்து வழிகளிலும் கொள்ளையடிக்கின்றனர்.
மோடியை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்சா, இராச்டிரிய ஜனதா தளம் ஆகியவை வெளிப்படையாக மிரட்டுகின்றன. என்னை ஏன் நீக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், அவ்வாறு செய்தால் தான் அவர்களுக்கு மீண்டும் கொள்ளையடிக்க வாய்ப்பு கிடைக்கும். உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன் அவர்கள் கொள்ளையடிக்க வாய்ப்பு தர போகிறீர்களா?
ஜூன் 4 க்கு பிறகு புதிய அரசு அமைக்கப்படும். புதிய அரசு அமைத்த உடன், ஏழை மக்களுக்கு 3 கோடி வீடுகள் கட்டித்தருவேன் என பேசியுள்ளார்.