தீபாவளி மறுநாள்; பிரபல ஜவுளிக் கடையில் சலுகை - அதிகாலை 3 மணிக்கே முண்டியடித்த கூட்டம்!
பிரபல ஜவுளிக் கடையில் தீபாவளிக்கு மறுநாளான இன்று சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜவுளியில் சலுகை
தீபாவளி பண்டிகை வந்தாலே தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் கொண்டாட்டம் களைகட்டும். 99 சதவீதம் மக்கள் புத்தாடை வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தீபாவளியை ஒட்டி கடைகளில் தள்ளுபடி அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் ஈரோட்டில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் தீபாவளிக்கு மறுநாளான இன்று சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
முண்டியடித்த கூட்டம்
40 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்த காரணத்தால் அதிகாலை 3 மணிக்கே விற்பனை தொடங்கப்பட்டது.

கடை திறந்ததும் முண்டியடித்துக் கொண்டு துணிகளை மக்கள் வாங்கி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அகற்றப்பட்ட சிங்கள வர்த்தக நிலையங்கள்! மொட்டுக்கட்சிக்கு பதிலடி கொடுத்த விஜேபால IBC Tamil
மெனிக் பார்ம் அகதி முகாமிலிருந்த சிறுமி மீதான அத்துமீறல்: இந்து மதகுருவுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு IBC Tamil