உங்களை தேடி வந்து பணம் கொட்டும்.. யூடியூப் ஜோதிடர் பேச்சை கேட்டு மக்கள் செய்த சம்பவம்!
யூடியூப் ஜோதிடர் ஒருவர் கூறியதை கேட்டு கோயில் முன்பு மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
யூடியூப் ஜோதிடர்
நாமக்கல் மாவட்டம், கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. தற்போது மார்கழி மாதம் நரசிம்மர் கோயிலில் தினந்தோறும் பல்வேறு நிகழ்வுகள் நடைப்பெறுவது வழக்கம்.
இந்த நிலையில், மார்கழி முதல் நாள் தொடங்கி நரசிம்மர் கோவிலில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கோவிலுக்கு அதிகாலை முதலே குவிய தொடங்கினர்.
அதை தொடர்ந்து, சூரிய உதயமான பிறகும், அனைவரும் கோயில் வளாகத்தில் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தியானம் செய்தனர். இது குறித்து அங்குள்ள மக்களிடம் விசாரித்தப்போது, யூடியூபில் ஆன்மீக ஜோதிடராக இருப்பவர் பிரகு.பிரபாகரன்.
குவிந்த மக்கள்
இவர் ஜோதிடம் தொடர்பான செய்திகளை வீடியோ பதிவாக வெளியிட்டு வந்துள்ளார். அந்த வகையில், இன்றைய தினம் (16.12.24) மீன ராசியில் ராகு, கன்னி ராசியில் கேது பகவான் சஞ்சாரம் செய்வதால் நாமக்கல் நரசிம்மர் கோவிலில் உள்ள லட்சுமி நரசிம்மர்
மற்றும் நாமகிரி தாயாருக்கு சிறப்பு பூஜை செய்து சுமார் 1 மணி நேரம் தியானம் செய்தால் சகல விதமான செல்வங்கள் கிடைக்கும், அபரிமிதமான பொருளாதார முன்னேற்றம் அடைய முடியும். உங்களைத் தேடி பணம் கொட்டும் என கூறியிருக்கிறார்.
இதனை பார்த்து நம்பி ஆயிரக்கணக்கானோர் கோவில் முன் குவிந்துள்ளனர். அதேசமயம் இதுகுறித்து கோயில் நிர்வாகத்திற்கும் முன்கூட்டியே யாரும் தகவல் தெரிவிக்கவில்லை. பல்வேறு ஊர்களில்,
இருந்து வந்து கலந்து கொண்ட பொதுமக்கள் வந்த வாகனங்களை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.