நள்ளிரவில் பூத்த பிரம்ம கமல பூ; கோடி புன்னியமாம்.. ஆர்வத்தில் பார்க்க குவிந்த மக்கள்!
பிரம்ம கமலம் பூ ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் எனக் கூறப்படுகிறது.
பிரம்ம கமல பூ
பிரம்ம கமலம் பூவானது இமயமலை மற்றும் இந்தியாவின் பிற மலை பிரதேசங்களில் பூக்கும். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். புனித மலராகவும் கருதப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் பிரசித்தி பெற்ற அன்னாவரம் வீர வெங்கட சத்யநாராயண சுவாமியின் திவ்ய க்ஷேத்திரத்தில் உள்ள கணபதி என்பவரின் இல்லத்தில், நள்ளிரவில் மூன்று பிரம்ம கமலம் மலர்கள் பூத்துள்ளது.
குவிந்த மக்கள்
இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அந்த மலர்களுக்கு சிறப்பு பூஜை செய்து ஸ்ரீ சத்யநாராயண சுவாமியின் பாதத்தில் சமர்பித்துள்ளனர். தொடர்ந்து காக்கிநாடா, சோழவரம்பகுதியில் உள்ள ஸ்ரவணமாசம் ஜெயம் மங்களாவரண்ணா என்ற இடத்தில் உள்ள ஆன்மிக சாதகரின் இல்லத்தில் பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அனைவரும் அந்த மலரை தரிசனம் செய்துள்ளனர். இதுகுறித்த வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், பிரம்ம கமலம் பூ மலர்ந்தவுடன்,
குடும்பத்தினர் மரத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான விளக்குகளை ஏற்றி, மஞ்சள் குங்குமம் சமர்ப்பித்து சிறப்பு பூஜைக்கு தயார் செய்தனர். பின்னர் அனைவரும் வந்தவுடன் சிறப்பு பூஜை நடந்துள்ளது.