கருகிய சாமந்தி பூ ; டிராக்டர் வைத்து அழித்த பரிதாபம் - கண்ணீர் விட்டு கதறிய விவசாயி

Viral Video
By Thahir Dec 03, 2022 09:26 AM GMT
Report

சமாந்தி பூ செடிகள் மீது நோய் தாக்குதல் ஏற்பட்டதால் டிராக்டர் வைத்து மண்ணோடு மண்ணாக அழித்த போது விவசாயி கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சிகள் வெளியாகி பார்ப்போர் மனதை கலங்கச் செய்கிறது.

ஏமாற்றும் இயற்கை 

விவசாயிகள் என்பவர் நாட்டின் முதுகெலும்பு என்று பள்ளி பாடகத்தில் படித்திருப்போம். ஆனால் அவர்கள் படும்பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல.

இரவு பகல் பாராமல் ஒரு பயிரை வளர்க்க கடும் இன்னலுக்கு ஆளாகி பல மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

மனிதர்கள் உதவி கிடைகாத போதும் இயற்கையின் மீது நம்பிக்கை கொண்டு அதன் உதவியுடன் பயிரிடும் விவசாயிகளுக்கு சில நேரம் ஏமாற்றமே மிச்சம்.

கண்ணீர் விட்டு கதறி அழுத விவசாயி 

அந்த வகையில், தருமபுரி மாவட்டம் தொப்பூரைச் சேர்ந்தவர் 72 வயதுடைய விவசாயி ஒருவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் சமாந்தி பூக்களை நடவு செய்து விவசாயம் செய்து வந்துள்ளார்.

charred-marigold-flower-the-farmer-burst-into-tear

இந்த நிலையில் பூச்செடிகள் மீது நோய் தாக்குதல் ஏற்பட்டதால் டிராக்டரை கொண்டு கருகி போன சமாந்தி பூ செடிகளை மண்ணோடு சேர்த்து அழித்தார்.அப்போது அவர் கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சிகள் பார்ப்போர் நெஞ்சை கலங்கச் செய்கிறது.

charred-marigold-flower-the-farmer-burst-into-tear

பல நேரங்களில் கடன்களை வாங்கி விவசாயம் செய்து வாழ்ந்து வரும் நாட்டின் முதுகெலும்பான இவர்களுக்கு இயற்கை கைகொடுக்காமல் மனம் உடைந்து நிற்கதியாக நிற்கும் போது அரசு தாமாக முன் வந்து உதவிட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.