கள்ளக்கடல்; ராட்சத அலையில் சிக்கி 8 பேர் பலி; மருத்துவ உலகிற்குப் பேரிழப்பு - முதல்வர் இரங்கல்!

M K Stalin Kanyakumari Death
By Swetha May 07, 2024 06:01 AM GMT
Report

ராட்சத அலையில் சிக்கி 8 பேர் உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கள்ளக்கடல்

அமைதியாக கிடக்கும் கடல், எந்தவித மாற்றங்களும் இன்றி திடீரென கொந்தளித்து கரையோரங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதையே `கள்ளக்கடல்’ என்கின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன் கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக ரெட் அலெர்ட் விடப்பட்டிருந்தது.

கள்ளக்கடல்; ராட்சத அலையில் சிக்கி 8 பேர் பலி; மருத்துவ உலகிற்குப் பேரிழப்பு - முதல்வர் இரங்கல்! | Loss Medical World Tamil Chief Minister Mourns

தமிழகம் மற்றும் கேரளா கடல் பகுதிகளில் பல அடி உயரத்துக்கு பெரிய அளவிலான அலைகள் திடீர் திடீரென எழும் எனவும், கடல் அலை கரையில் நீண்ட தூரம் வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தேசிய கடல்சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை மற்றும் திருச்சியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். போலீசாரின் எச்சரிக்கையும் மீறி கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் அருகே கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது கடலில் குளித்தபோது 6 பேரை அலை இழுத்துச் சென்றது.

கல்குவாரி வெடி விபத்து; பலியானவர்கள் வாரிசுக்கு அரசு வேலை - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

கல்குவாரி வெடி விபத்து; பலியானவர்கள் வாரிசுக்கு அரசு வேலை - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

முதல்வர் இரங்கல்

இதில் 5 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். ஒரு மாணவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் தந்தை மற்றும் மகள் 7 வயது மகளை ராட்சத கடல் அலைகள் இழுத்துச் சென்ற நிலையில் தந்தை மற்றும் மீட்கப்பட்டார். பிறகு சிறுமி உயிரிழந்து மீட்கப்பட்டார்.

கள்ளக்கடல்; ராட்சத அலையில் சிக்கி 8 பேர் பலி; மருத்துவ உலகிற்குப் பேரிழப்பு - முதல்வர் இரங்கல்! | Loss Medical World Tamil Chief Minister Mourns

இதனை தொடர்ந்து கடலில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 'தன் பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். மருத்துவ மாணவர்களின் உயிரிழப்பு உண்மையிலேயே மருத்துவ உலகிற்கு பேரிழப்பு.

கள்ளக்கடல்; ராட்சத அலையில் சிக்கி 8 பேர் பலி; மருத்துவ உலகிற்குப் பேரிழப்பு - முதல்வர் இரங்கல்! | Loss Medical World Tamil Chief Minister Mourns

தகவல் கிடைத்ததும் ஆட்சியர்களைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினேன். பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றுத் தரப்படும். காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்க உத்தரவிட்டுள்ளேன்' என்றார்.