எலும்பும், தோலுமாக மாறிய லாஸ்லியா - வைரலாகும் புகைப்படம் - ஷாக்கான ரசிகர்கள்
தற்போது இணையத்தில் லாஸ்லியாவின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
லாஸ்லியா
இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் லாஸ்லியா நடிப்பில் ‘ஃபிரென்ட்ஷிப்’ திரைப்படம் வெளியானது.
இதைனையடுத்து, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ள 'கூகுள் குட்டப்பன்' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் லாஸ்லியா, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
வைரல் புகைப்படம்
இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் லாஸ்லியா. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஷாக்காகி கமெண்ட் செய்து வருகின்றர். கொஞ்சம் உடம்பை தேற்றுங்கள்... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.