ஆள் அடையாளமே தெரியாமல் ஸ்லிம்மாக மாறிய லாஸ்லியா - ரசிகர்கள் அதிர்ச்சி..!

Thahir
in பிரபலங்கள்Report this article
நடிகை லாஸ்லியா உடல் மெலிந்த நிலையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றார் நடிகை லாஸ்லியா. அந்நிகழ்ச்சியில் கவின் உடன் காதல் சர்ச்சையாக வெடித்தது.
பிக்பாஸ் சீசன் 3 மூலம் ஏராளமான வாய்ப்புகள் வரத் தொடங்கியது. இதையடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிகராக நடித்த பிரண்ட்ஷிப் படத்தில் லாஸ்லியா நடித்திருந்தார்.
எதிர்பார்த்த வெற்றியை அந்த படம் கொடுக்கவில்லை.இதை தொடர்ந்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
இருந்த போதும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் அவர் பிசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நடிகை லாஸ்லியா தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.
அண்மையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை லாஸ்லியா லீக்ஸ் என்ற பெயரில் வெளியிட்டு இருந்தனர்.
இதை பார்த்த அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.அந்த புகைப்படத்தில் லாஸ்லியா படு ஸ்லிம்மாக ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கும் போட்டோவை ஹேக்கர்கள் வெளியிட்டுள்ளனர்.
அந்த புகைப்படத்தை யாருக்கும் தெரியாமல் வைத்திருந்த நிலையில் தற்போது ஹேக்கர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்தி பதிவிட்டுள்ளனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த அந்த புகைப்படத்தை அவர் நீக்கியுள்ளார்.