2 பிள்ளைகளை அறையில் பூட்டிவிட்டு.. காதலனுடன் தாய் - இறுதியில் அரங்கேறிய கொடூரம்
மாநகராட்சி ஊழியர் கள்ளக்காதலியை கல்லால் அடித்துக் கொன்றுள்ளார்.
தகாத உறவு
பல்லாவரம், அனகாபுத்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் ஞான சித்தன்(40). தாம்பரம் மாநகராட்சியில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வரும் இவருக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி(33) என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற பாக்கியலட்சுமிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஏற்கனவே பாக்கியலட்சுமிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருந்துள்ளது.
இந்நிலையில், ஞான சித்தனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பாக்கியலட்சுமி இருவருடனும் ரகசியமாக உறவை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பாக்கியலட்சுமியின் வீட்டுக்கு ஞான சித்தன் வந்துள்ளார்.
காதலன் வெறிச்செயல்
அப்போது, பாக்கியலட்சுமி அவரின் இரண்டு பிள்ளைகளையும் ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு, ஞான சித்தனுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதில் கள்ளத்தொடர்பு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை முற்றியுள்ளது. இதனால் ஆத்திரம் தலைக்கேறிய ஞான சித்தன்,
அருகில் இருந்த கடப்பா கல்லை எடுத்து பாக்கியலட்சுமியின் தலையில் பல முறை பலமாக அடித்துள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ஞான சித்தன், நடந்த சம்பவம் பற்றி கூறி போலீஸில் சரணடைந்துள்ளார்.
இதனையடுத்து போலீஸார் சம்பவ இடம் விரைந்து உடலை கைப்பற்றி, ஞான சித்தன் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.