தாறுமாறாக ஓடிய டிரக், பயங்கர விபத்து - 52 பேர் உயிரிழப்பு!

Accident Kenya
By Vinothini Jul 02, 2023 06:49 AM GMT
Report

 கென்யாவில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் தாறுமாறாக வந்த டிரக்கால் விபத்து ஏற்பட்டுள்ளது.

கென்யா

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மேற்கு பகுதியில் டிரக் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்த டிரக் கெரிச்சோவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

lorry-accident-in-kenya-52-people-were-dead

அப்பொழுது லண்டியானி சந்திப்பு பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்றுகொண்டிருந்த உள்ளூர் பேருந்துகள், பயணிகள்மீது மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது.

உயிரிழப்பு

இந்நிலையில், இந்த கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 32 பேர் காயம் அடைந்தனர். நைரோபியில் இருந்து 200 கி.மீட்டர் தொலைவில் உள்ள லண்டியானி நகரத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

lorry-accident-in-kenya-52-people-were-dead

இந்த பகுதி அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் ஒன்றாகும். மேலும், இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு அந்நாட்டு அதிபர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.