உங்கள் முகம் எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டுமா ? இனி ஃபேஸ் ஸ்க்ரப்... வீட்டிலேயே செய்யலாம்

Healthy Food Recipes
5 நாட்கள் முன்

 நீங்கள் உண்ணும் பழங்களின் தோல்களை இனி தூக்கி எறிய வேண்டாம்... மாறாக இந்த முறையில் ஃபேஸ் ஸ்க்ரப் செய்து உங்கள் சருமத்தை பத்து வருடம் இளமையாக தோற்றமளிக்க செய்யுங்கள். ஆண், பெண் இருவருமே பயன்படுத்தக்கூடிய இந்த ஃபேஸ் ஸ்க்ரப்பை வீட்டிலேயே செய்யலாம்.

பழங்களின் தோல்களே போதும் 

இந்த ஃபேஸ் ஸ்க்ரப் செய்ய உங்கள் வீட்டில் நீங்கள் வாங்கும் பழங்களின் தோல்களே போதும். இந்த பழங்களை நீங்கள் உண்ணும் போது உங்களுக்கு எவ்வளவு நன்மைகளை தருகின்றனவோ அதே அளவிற்கு அவற்றின் தோல்கள் உங்கள் சருமத்திற்கு நன்மைத்தரும்.

உங்கள் முகம் எப்போதும் இளமையுடன் இருக்க  வேண்டுமா ? இனி  ஃபேஸ் ஸ்க்ரப்... வீட்டிலேயே செய்யலாம் | Look Dull Glow On Your Face

ஆரஞ்சு, வாழைப்பழம், மாதுளை இவற்றின் தோல்களை நன்றாக வெயிலில் உளர விடுங்கள். உளர வைத்த தோல்களை கொஞ்சம் வெள்ளை சர்கரையுடன் சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும். அந்த பொடியை சிறிதளவு தேனுடன் சேர்த்து முகத்திற்க்கான ஸ்க்ரப் போல பயன்படுத்தலாம்.

தேனுக்கு பதிலாக கொஞ்சம் தயிரும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த ஃபேஸ் ஸ்க்ரப் எல்லா விதமான சருமத்திற்கும் பொருந்தும். இந்த ஸ்க்ரப்பை உங்கள் முகத்தில் எல்லா இடத்திலும் பூசியப்பின் நன்றாக மசாஜ் செய்து விடுங்கள். முகப்பரு அதிகமாக இருந்தால், மசாஜ் செய்ய வேண்டாம்.  

இந்த தோல்கள் என்ன செய்யும்

இதில் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு தோலுக்கும் ஒரு வேலை இருக்கிறது. ஆரஞ்சு தோல் உங்களுக்கு இருக்கும் சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். மாதுளை தோல் இறந்த செல்களை நீக்கும். வாழைப்பழத்தின் தோல் முகப்பருக்களை நீக்கும்.

தேனும், தயிரும் ஒரு பேஸ்ட் தன்மையை கொடுக்க பயன்படுத்தப்பட்டாலும், அவற்றாலும் பல நன்மைகள் உள்ளது. நீங்கள் மந்தமான சருமம் கொண்டவராக இருந்தால் இந்த ஸ்க்ரப் உங்களுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.

கடைசியாக ஒரு ஃபேஸ் பேக் பலனை அதிகரிக்கும்

ஸ்க்ரப்பை பயன்படுத்திய பின்னர் வாழைப்பழம், காஃபி தூள், தேன் போன்றவற்றை வைத்து ஒரு ஃபேஸ் பேக் செய்து போட்டால், இன்னும் நல்ல பயனை அடையலாம். இதற்கு பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்தினால், சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். இதனை செய்யும் போது நீங்கள் கொடுக்கும் மசாஜ்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

உங்கள் முகம் எப்போதும் இளமையுடன் இருக்க  வேண்டுமா ? இனி  ஃபேஸ் ஸ்க்ரப்... வீட்டிலேயே செய்யலாம் | Look Dull Glow On Your Face

இரத்த ஓட்டம் அதிகரித்தாலே சருமம் பளிச்சென்று இருக்கும். உங்கள் வீட்டிலேயே நீங்கள் செய்த இந்த ஸ்க்ரப்பை 15 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தினால், உங்கள் சருமம் இளமையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க முடியவில்லையா? கவலை வேண்டாம் - இதை ட்ரை பண்ணுங்க..!

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.