காரி துப்பாத அளவிற்கு...இதனால் தான் ஸ்ருதியுடன் அப்படி நடித்தேன் - போட்டுடைத்த லோகேஷ்

Karthick
in பிரபலங்கள்Report this article
இன்று மாலை இனிமேல் ஆல்பம் பாடல் வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ்
இந்தியாவில் உற்றுநோக்கப்படும் இயக்குனராக வளர்ந்துள்ளவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து வெற்றி படங்கள் மாநகரில் துவங்கி லியோ வரை என ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் அவரின் திரை பயணத்தில் அவர் அடுத்து ரஜினிகாந்துடன் இணைந்து பணிபுரியவுள்ளார்.
LCU'வில் அடுத்து என்ன என பலரும் தேடி வரும் நிலையில், ஆல்பம் பாடலில் நடித்துள்ளார் லோகேஷ். ஸ்ருதிஹாசனுடன் அவர் நடித்த பாடலின் glimpse வெளியாக பலரும் பலதரப்பட்ட கருத்துக்களை பதிவிட துவங்கினர். அதிலும் லோகேஷை நோக்கி பல நெகட்டிவ் கமென்டன்ஸ் தான் பல. இந்நிலையில் எதனால் இந்த ஆல்பம் சாங்கில் நடித்தேன் என்பதை குறித்து விளக்கமளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
அவர் அளித்த பேட்டியில், குழுவினர் இதுதான் கான்செப்ட் என்று புரிய வைத்தனர் என்ற லோகேஷ், நடிக்க வேண்டும் என்று தான் முயற்சி செய்து கூட பார்த்ததில்லை என்றும் நடிப்பை ஒரு சவாலாக ஏன் எடுத்து செய்யக்கூடாது என்ற zone'குள்ளும் தான் என்றைக்கும் சென்றது கிடையாது என்றார்.
காரி துப்பாத அளவிற்கு
ஸ்கிரிப்ட் புக் படித்த பிறகு, தினசரி டைரக்ஷன் டீம் தன்னை சந்தித்தாக குறிப்பிட்ட லோகேஷ், தான் தொடர்ந்து அவர்களிடம் "why me" என்ற கேள்வியை எழுப்பியதாக தெரிவித்து ஷூட்டிங்கின் 2 நாளுக்கு முன்பு கூட நடிப்பதில் தான் உறுதியாக இல்லை என்றார்.
ஆனால் டீமுடன் தினசரி சந்தித்தது, ஒரு வித சௌகரியத்தை உண்டாக்கியதாக குறிப்பிட்டு, யாரும் காரி துப்பாத அளவிற்கு செய்துவிட்டேன் என்று நினைப்பதாக கூறினார்.
You May Like This Video