ஸ்ருதியுடன் படு ரொமான்ஸில் லோகேஷ் கனகராஜ் - இணையத்தை தெறிக்கும் இனிமேல்..!
இனிமேல் ஆல்பம் பாடல் மூலம் நடிகராக மாறியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியா சினிமாவே உற்றுநோக்கும் இயக்குனராக குறுகிய காலத்தில் வளர்ந்த்துள்ளார் லோகேஷ்.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என வரிசையாக பெரும் வெற்றி படங்களை இயக்கியுள்ள அவர் தற்போது ரஜினியுடன் கூட்டணி அமைத்துள்ளார். சூப்பர்ஸ்டாருடன் அவர் கூட்டணி அமைத்துள்ளதே பெரும் எதிர்பார்ப்புகளை கொடுத்துள்ளது.
இனிமேல்
இதற்கு நடுவில் நடிகராகவும் மாறியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஸ்ருதி ஹாசனுடன் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் அவர் நடித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த இசை வீடியோவிற்கு கமல் ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் இசையமைத்து இருக்கிறார்.

அதில் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதி ஹாசன் இடையே ஏகப்பட்ட ரொமன்ஸ் காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. இனிமேல் பாடல் மார்ச் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.
1500 நாட்கள் போராட்டம்: இன்னும் தீர்வின்றி தொடரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் கோரிக்கை IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil