வெளியான ஆபாச வீடியோ..!! பதறிப்போன லோகேஷ் கனகராஜின் Statement...!
இந்தியாவின் மிக முக்கிய இயக்குனராக தற்போது லோகேஷ் கனகராஜ் உள்ளார்.
லோகேஷ் கனகராஜ்
"மாநகரம்" படம் சிறப்பான திரைக்கதை வடிவமைப்பிற்காக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ், கார்த்தியுடன் இணைந்த "கைதி" திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
அதனையடுத்து விஜய்யுடன் மாஸ்டர், கமலுடன் "விக்ரம்" மீண்டும் விஜயுடன் "லியோ" என தொடர் வெற்றிகளை கொடுத்து, பெரும் வசூலை ஈட்டியுளார் லோகேஷ். இந்தியாவின் முன்னணி பல நடிகர்களும் தற்போது இவருக்காக காத்திருக்கிறார்கள்.
தற்போது ஒரு புறம் ரஜினியின் 171 படத்தின் முதற்கட்ட பணிகளில் இறங்கியுள்ள லோகேஷ், அத்துடன் சேர்த்து "ஜி ஸ்குவாட்" என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கி தனது முதல் பட வெளியீட்டிற்கு தயாராகியுள்ளார். உறியடி நாயகன் விஜய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள "Fight Club" என்ற படத்தை வரும் 15-ஆம் தேதி "ஜி ஸ்குவாட்" மூலமாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தான் லோகேஷ் கனகராஜின் Facebook பக்கத்தில் ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hey all, I’m only available on Twitter and Instagram, I do not have or use any other social media accounts. Please feel free to ignore and unfollow any other hoax accounts!
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 13, 2023
இந்நிலையில், தான் இது குறித்து விளக்கமளித்துள்ள லோகேஷ் கனகராஜ், தான் இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் தளங்களில் மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டு, வேறு எந்த பக்கத்திலும் தனக்கு கணக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.