நிறைவேறுமா மத்திய அமைச்சர் கனவு - ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் நிலவரம் என்ன?
ராமநாதபுர மக்களவை தேர்தலுக்கான முன்னிலை விவரத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி முன்னிலை பெற்றுள்ளார்.
ராமநாதபுரம்
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், சுயேச்சை வேட்பாளராக ராமநாதபுரத்தில் பாஜக ஆதரவில் களமிறங்கினார். பலாப்பழ சின்னத்தில் களமிறங்கிய ஓபிஎஸ், அதிமுகவை எதிர்த்தே களம் கண்டார்.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர் அதிமுகவியே எதிர்த்து போட்டியிட்ட நிலையில், 2026-ஆம் ஆண்டு தேர்தலின் போது, அதிமுக தங்கள் வசம் ஆகும் என்றெல்லாம் கூறினார்.
Breaking News : திருச்சியில் கடும் போட்டி கொடுக்கும் நா.த.க - சீமான் அதிரடி பயனளித்ததா?? நிலவரம் என்ன!
பின்னடைவு
அத்தொகுதியில், திமுக கூட்டணியில் நவாஸ் கனி, அதிமுகவில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.மத்திய அமைச்சர் பதவி குறித்தெல்லாம் பேசினார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.
தற்போது வெளியாகி வரும் முன்னிலை நிலவரங்களில் சிட்டிங் எம்.பி நவாஸ் கனி 11155 வாக்குகளும், 2-வது இடத்தில் ஓபிஎஸ் 5693 வாக்குகளும் பெற்றுள்ளனர்.