Exit Poll 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் - வெற்றி யாருக்கு?

Indian National Congress Tamil nadu BJP India Lok Sabha Election 2024
By Jiyath Jun 01, 2024 05:37 PM GMT
Report

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.  

மக்களவை தேர்தல் 

2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 543 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

Exit Poll 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் - வெற்றி யாருக்கு? | Lok Sabha Exit Poll 2024 Results Predictions

இவற்றில் குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல்களில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

ரிபப்ளிக் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு:

பாஜக கூட்டணி: 353 - 358

இண்டியா கூட்டணி- 118 - 133

மற்றவை - 43 - 48

இண்டியா டுடே - Matrize கருத்துக் கணிப்பு:

பாஜக கூட்டணி: 353 - 368

இண்டியா கூட்டணி: 118 - 133

மற்றவை: 43 - 48

இண்டியா டுடே - PMARQ கருத்துக் கணிப்பு:

பாஜக கூட்டணி - 354

இண்டியா கூட்டணி - 154

ஜன் கி பாத் கருத்துக் கணிப்பு:

பாஜக கூட்டணி: 362 - 392

இண்டியா கூட்டணி: 141 - 161

மற்றவை: 10 - 20

இந்தியா நியூஸ் - டி டைனமிக்ஸ் கருத்துக் கணிப்பு:

பாஜக கூட்டணி - 371

இண்டியா கூட்டணி - 125

மற்றவை - 30

நியூஸ் நேஷன் கருத்துக் கணிப்பு:

பாஜக கூட்டணி - 342+

இண்டியா கூட்டணி - 153+

மற்றவை - 21+

இந்தியா டுடே ஆக்சிஸ் கருத்துக் கணிப்பு (தமிழகம்):

திமுக கூட்டணி - 33+

பாஜக கூட்டணி - 2 முதல் 4

Exit Poll 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் - வெற்றி யாருக்கு? | Lok Sabha Exit Poll 2024 Results Predictions

ஏபிபி - சி-வோட்டர் கணிப்பு (தமிழகம்):

திமுக கூட்டணி - 37

பாஜக - 2

அதேபோல் இண்டியா டுடே கருத்துக் கணிப்பின்படி தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகவுக்கு 2 முதல் 4 சீட்கள், அதிமுகவுக்கு 0 முதல் 2, திமுக கூட்டணிக்கு 33 முதல் 37 சீட்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.