மக்களவைத் தேர்தல்(2024): 1- 10 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? ஐபிசியின் மெகா கருத்து கணிப்பு!

IBC Tamil ADMK DMK BJP Lok Sabha Election 2024
By Karthick Apr 17, 2024 10:03 AM GMT
Report

தமிழகத்தில் வாக்கெடுப்பு நாள் ஏப்ரல் 19. வாக்களிக்க மறவாதீர்.

ஐபிசி தமிழ் கருத்துக்கணிப்பு

வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டின் களநிலவரத்தை குறித்து ஐபிசி தமிழ் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள 39 தொகுதிகளின் களநிலவரத்தை ஆராய்ந்து, ஐபிசி தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் இதோ.

1- திருவள்ளூர் (தனி)

காங்கிரஸ்(திமுக கூட்டணி) - சசிகாந்த் செந்தில், தேமுதிக(அதிமுக கூட்டணி) - நல்லதம்பி, பாஜக - பொன்.வி.பாலகணபதி, நாம் தமிழர் - ஜெகதீஷ் சந்தர்.

திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக சசிகாந்த் செந்தில் வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.

2 - வடசென்னை

திமுக - கலாநிதி வீராசாமி, அதிமுக - ராயபுரம் மனோ, பாஜக - பால் கனகராஜ், நாம் தமிழர் - அமுதினி

திமுகவின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மீண்டும் வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.

3 - தென் சென்னை

திமுக - தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக - ஜெயவர்தன், பாஜக - தமிழிசை செளந்தரராஜன், நாம் தமிழர் - தமிழ்ச்செல்வி

இதில், திமுக சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.

4- மத்திய சென்னை

திமுக - தயாநிதிமாறன், தேமுதிக(அதிமுக கூட்டணி) - பார்த்தசாரதி, பாஜக - வினோஜ் செல்வம், நாம் தமிழர் - டாக்டர் கார்த்திகேயன்.

இதில், திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதிமாறன் வெற்றிபெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது. 

5- திருப்பெரும்புதூர்

திமுக - டி.ஆர்.பாலு, அதிமுக - பிரேம்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் (பாஜக கூட்டணி) - வி.என். வேணுகோபால், நாம் தமிழர் - ரவிச்சந்திரன்

திமுக வேட்பாளரான டி.ஆர்.பாலு வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.

6- காஞ்சிபுரம்(தனி)

திமுக - செல்வம், அதிமுக - ராஜசேகர், பாமக (பாஜக கூட்டணி) - ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் - சந்தோஷ்குமார்.

திமுக வேட்பாளரான செல்வம் வெற்றிபெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.

7 - அரக்கோணம்

திமுக - ஜெகத்ரட்சகன், அதிமுக - ஏ.எல்.விஜயன், பாமக (பாஜக கூட்டணி) - வழக்கறிஞர் பாலு, நாம் தமிழர் - பேராசிரியர் அப்சியா நஸ்ரின்.

திமுக வேட்பாளரான ஜெகத்ரட்சகன் வெற்றிபெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.

8- வேலூர்

திமுக - கதிர் ஆனந்த், அதிமுக - டாக்டர் பசுபதி, பாஜக - ஏசி சண்முகம், நாம் தமிழர் - மகேஷ் ஆனந்த்.

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீண்டும் வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.

9- கிருஷ்ணகிரி

காங்கிரஸ்(திமுக கூட்டணி) - கோபிநாத், அதிமுக - ஜெயப்பிரகாஷ், பாஜக - நரசிம்மன் நாம் தமிழர் - வித்யாராணி வீரப்பன்

திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் வெற்றிபெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது. 

10 -தருமபுரி

திமுக - மணி, அதிமுக - டாக்டர் அசோகன், பாமக - சவுமியா அன்புமணி, நாம் தமிழர் - கா. அபிநயா.

திமுக வேட்பாளரான மணி, அதிமுக வேட்பாளரான டாக்டர் அசோகன் மற்றும் பாமக போட்டியாளரான சவுமியா அன்புமணி மூவருக்கும் மும்முணை போட்டி நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.