கோவை தொகுதி: வெல்லப்போவது யார்.. அண்ணாமலைக்கு பிறந்தநாள் பரிசு கிடைக்குமா?
கோயம்பத்தூர் மக்களவை தொகுதியில் வாக்கு எண்னிக்கை நடைபெற்று வருகிறது.
மக்களவை தேர்தல்
2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 543 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இவற்றில் குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதியான இன்று எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் 5 முறையும், சிபிஐ 5, சிபிஎம் 3, திமுக 2 , பாஜக 2, அதிமுக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
வெற்றி யாருக்கு?
கடந்த 2019 மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் சிபிஎம் சார்பில் போட்டியிட்ட பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்றார். 2024 மக்களவை தேர்தலில் அந்த தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை, நாதக சார்பில் கலாமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதனால் கோவை தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் யார் வெற்றிபெறுவார் என்பது வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தெரியவரும். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிறந்தநாள் பரிசாக கோவை தொகுதி கிடைக்குமா? என்பதும் இன்று மதியத்திற்குள் தெரியவரும்.