ராகுல் காந்தி செய்த சம்பவம் - உச்சக்கட்ட பரபரப்பு !!2 நாட்களுக்கு அவையை ஒத்திவைத்த சபாநாயகர்
நீட் தேர்வு குறித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மக்களவை
நாட்டின் 18-வது மக்களவை கூடியது முதலே பெரும் சலசலப்புகளை உண்டாக்கி வருகின்றது. மக்களவை சபாநாயகர் தேர்வு தேர்தல் வரை நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சென்றது.
அதே நேரத்தில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை நடைபெற்று முடிந்ததை அடுத்து, எதிர்க்கட்சிகள் நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் என் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வருகின்றன.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று மக்களவை அலுவல் பணிகளை ஒத்திவைத்து விட்டு நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.
ஒத்திவைப்பு
ஆனால், அதனை மறுத்த சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வாலை பேச அழைத்தார். இதனை கண்டித்து. எதிர்க்கட்சிகள் இருக்கைக்கு மேல் நின்று கடும் கூச்சவிட்டனர்.
சபாநாயகர் இருக்கையை அவர்கள் முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்ட நிலையில், சபாநாயகர் அவையை ஒத்திவைத்தார்.
வரும் ஜூலை 1-ஆம் தேதி காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அவர் அறிவித்திருக்கிறார்.