ரயில் வரும் பொழுது தண்டவாளத்தில் குடையுடன் தூங்கிய நபர் - அடுத்து நடந்தது என்ன?
ரயில் வரும் பொழுது குடையுடன் தண்டவாளத்தில் ஒரு நபர் படுத்து தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தண்டவாளத்தில் தூக்கம்
உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இருந்து மவுயிமா வழியாக பிரதாப்கர் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது. மவுயிமா ரயில்வே கிராசிங் அருகே உள்ள மேம்பாலம் வந்தபோது, தண்டவாளத்தில் ஒருவர் குடையுடன் கிடப்பதை ரயிலின் லோகோ பைலட் பார்த்துள்ளார்.
உடனே சுதாரித்து கொண்டு ரயிலை நிறுத்தி விட்டு அந்த நபரின் அருகே சென்று அவரை எழுப்பியுள்ளார். மிக நீண்ட நேரம் கழித்தே அவர் எழுந்துள்ளதாக தெரிகிறது. அதன் பின் அந்த நபர் அங்கிருந்து சென்றுள்ளார்.
மனநல குறைபாடு
இதனால் ரயில் சிறுது நேரம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டது. ரயில் தண்டவாளத்தில் குடையுடன் தூங்கிய நபர் மனநல குறைபாடு உள்ளவர் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
प्रयागराज:
— Amrit Vichar (@AmritVichar) August 25, 2024
रेल की पटरी पर छतरी लगाकर सो गया अधेड़
लोको पायलट ने ट्रेन रोक कर जगाया
पटरी से हटाया तब आगे बढ़ीट्रेन। pic.twitter.com/4h6A0S4Ja1
இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட அது தற்போது வைரலாகி வருகிறது. ரயிலை நிறுத்திய லோகோ பைலட்டை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.